வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு ஜெய்சங்கர் வாழ்த்து
இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு (Vijitha Herath) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நட்புறவின் வரலாற்று உறவுகளை வலுப்படுத்த தயாராக இருப்பதாக வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார்.
இரு நாடுகளின் உறவு
இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த இணைந்து செயற்படத் தயார் எனவும் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை இதில் எடுத்துக் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு (India) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |