ரஷ்யா - உக்ரைன் போர்! இன்று தொடங்கிய பேச்சுவார்த்தை...
உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (23.01.2026) நடைபெறுகிறது.
சுவிட்சர்லாந்தில் ட்ரம்பை சந்தித்த பிறகு பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர்
உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை ட்ரம்ப் முன்மொழிந்தார்.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.