ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Dollars
By Kamal Jul 01, 2023 07:29 AM GMT

இலங்கையில் கடந்த ஆறு மாத காலப் பகுதியில் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த மாதம் 28ம் திகதி வரையிலான காலப் பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதமாக உயர்வடைந்துள்ளது.

ரூபாவின் பெறுமதி

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Rupees High Srilanaka Dollar

அமெரிக்க டொலர் மட்டுமன்றி ஏனைய பிரதான நாணயப் பெறுமதிகளுக்கு எதிராகவும் ரூபாவின் பெறமதி வலுப்பெற்றுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

யூரோ, ஸ்ரெலிங் பவுண்ட், ஜப்பானிய யெண், அவுஸ்திரேலிய டொலர், இந்திய ரூபா என்பனவற்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.