ஒட்டுமொத்த நாகரிகமும் இன்றிரவு அழியும்: ஈரானுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

Donald Trump United States of America Iran World
By Vinoja Apr 07, 2026 02:46 PM GMT
Vinoja

Vinoja

அமெரிக்காவுடான ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒத்துழைக்காவிடில் "ஒட்டுமொத்த 'நாகரிகமும்' இன்றிரவு அழியும்" என டொனால் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்திற்கு வாஷிங்டன் டிசி நேரப்படி செவ்வாய் இரவு 8 மணிக்குள் ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என டிரம்ப் ஏற்கனவே கெடு கொடுத்திருந்த நிலையில்,

ஒட்டுமொத்த நாகரிகமும் இன்றிரவு அழியும்: ஈரானுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை! | Rump Last Warning To Iran About Hormuz Deadline

இது குறித்து தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோசியல் பதிவில், "ஒட்டுமொத்த 'நாகரிகமும்' இன்றிரவு அழியும். அது மீண்டும் ஒருபோதும் மீட்கப்படாது." எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் ட்ரம்ப் மேலும் குறிப்பிடுகையில், "அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அநேகமாக அது நடந்துவிடும்.

எனினும் தற்போது முழு ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அங்கு வித்தியாசமான, புத்திசாலித்தனமான மற்றும் தீவிரம் குறைவான மனங்கள் இருப்பதால் புரட்சிகரமான, அற்புதமான ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்?" "இன்று இரவு நமக்குத் தெரிந்துவிடும்.

உலகின் மிகவும் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்று.47 ஆண்டுகால மிரட்டி பணம் பறித்தல், உழல் மற்றும் மரணம் இறுதியாக முடிவுக்கு வரும். ஈரானின் சிறந்த மக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்." என குறிப்பிட்டுள்ளார்.