பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
Sri Lanka
Weather
By Mayuri
இரத்தினபுரி பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் குடாகே, மில்லகந்த பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜின் கங்கையின் நீர்மட்டம்
அத்துடன், ஜின் கங்கையின் நீர்மட்டம் பத்தேகம பகுதியில் அதிகரித்து வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் தூனமலே பகுதியில் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |