ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Law and Order
Court of Appeal of Sri Lanka
Rishad Bathiudeen
By Faarika Faizal
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், 2021ஆம் ஆண்டு (கோட்டாபய அரசில்) எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தான் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, வருகின்ற 2026 மார்ச் 25 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (02.10.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்
நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங் கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுவை அடுத்த ஆண்டு மார்ச் 25 அன்று விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |