இலங்கை மதுவரி திணைக்களத்தின் வருமானம் : வெளியான தகவல்

Sri Lanka Money Excise Department of Sri Lanka
By Shalini Balachandran Jul 03, 2024 08:33 PM GMT

இலங்கை மதுவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இதனூடாக நாட்டிற்கு பல பில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுவரி திணைக்களம் 

இதனடிப்டையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 105 பில்லியன் ரூபாய் வருமானத்தை இலங்கை மதுவரி திணைக்களம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மதுவரி திணைக்களத்தின் வருமானம் : வெளியான தகவல் | Revenue Increase Of Sri Lanka Liquor Department

மேலும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும் என எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW