சஜித்தின் மனைவிக்கு மரியாதையா! இலங்கை விமானப்படை விளக்கம்

Sajith Premadasa Sri Lanka Sri Lanka Air Force
By Sivaa Mayuri Sep 11, 2024 03:52 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் விமானப்படையினரால் சஜித்தின் மனைவிக்கு மரியாதை செலுத்தப்பட்ட காணொளி ஒன்று அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த காணொளியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஆகியோரை வரவேற்கும் வகையில், விமானப்படை வீரர் ஒருவர் மரியாதை செலுத்துவது காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை விமானப்படை விளக்கமளித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளில் இதுவரை களமிறங்காத 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்

தேர்தல் நடவடிக்கைகளில் இதுவரை களமிறங்காத 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்

விமானப்படையின் மரியாதை

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஜி.எல்.பீரிஸை கௌரவிக்கும் வகையில் மாத்திரமே நிலையான விமானப்படை நடைமுறைகளின்படி மரியாதை செலுத்தப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்;துள்ளது.

சஜித்தின் மனைவிக்கு மரியாதையா! இலங்கை விமானப்படை விளக்கம் | Respect Sajith Wife Sl Air Force Description

எனினும் வேறு எவருக்காகவும் இந்த மரியாதை செலுத்தப்படவில்லை என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக சஜித் பிரேமதாசவின் மனைவிக்கு விமானப்படையின் மரியாதை வழங்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்தே விமானப்படை தமது விளக்கத்தை வழங்கியுள்ளது. 

வவுனியாவிலுள்ள வெற்று காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

வவுனியாவிலுள்ள வெற்று காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

தபால் மூல வாக்களிப்பு! இறுதிக் கட்டடத்தை அடைந்த தபால் திணைக்களத்தின் பணிகள்

தபால் மூல வாக்களிப்பு! இறுதிக் கட்டடத்தை அடைந்த தபால் திணைக்களத்தின் பணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW