நுவரெலியாவிற்கு இரவு பயணம் செல்ல வேண்டாம்! சாரதிகளிடம் கோரிக்கை

Nuwara Eliya Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Dec 12, 2025 09:30 AM GMT
Fathima

Fathima

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (11) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தீர்மானம் 

போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து வீதி தடைப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

நுவரெலியாவிற்கு இரவு பயணம் செல்ல வேண்டாம்! சாரதிகளிடம் கோரிக்கை | Request To Drivers Not To Travel To Nuwara Eliya

நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

'டிட்வா' புயலினால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சில தரப்பினர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.