மண்சரிவு அபாயம் இன்னும் குறையவில்லை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Badulla Kandy Weather
By Fathima Dec 24, 2025 08:09 AM GMT
Fathima

Fathima

நாட்டின் சில பகுதிகளுக்கான மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அந்த பகுதிகளில் நிலவும் அபாயம் இன்னும் குறையவில்லை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

தற்போது மழைவீழ்ச்சி குறைந்துள்ளதால், சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அதிகாரிகள் வந்து சம்பந்தப்பட்ட அபாயப் பகுதிகளை ஆய்வு செய்யும் வரை மக்கள் அந்தப் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அதன் மூத்த விஞ்ஞானி ஹசாலி சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாயம் இன்னும் குறையவில்லை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Red Alert Issued For Landslides

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து தேவையான அறிவுறுத்தல்களை வழங்கும் வரை, அபாய பகுதிகளுக்கு திரும்ப வேண்டாம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது, ​​பதுளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.