கிழக்கில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள நியமனங்கள் : வெளியான அறிவித்தல்கள்

Ceylon Teachers Service Union Eastern Province Teachers
By Kiyas Shafe Jan 08, 2025 05:39 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

கிழக்கு மாகாண, மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, விண்ணப்பத்தாரர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல்கள் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜே.லியாகத் அலியினால்(Liyakath Ali) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3-I(அ) தரத்துக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை கடந்த 03.08.2024 அன்று இடம்பெற்றிருந்தது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் வெளியான தகவல்

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் வெளியான தகவல்

நேர்முகப்பரீட்சை 

இந்த நிலையில், குறித்த பரீட்சைக்கு தோற்றியிருந்த 1105 பரீட்சார்த்திகளின் பெயர்ப்பட்டியலையும் பொதுச் சேவை ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளதுடன்,  குறித்த 1105 பரீட்சார்த்திகளும் தற்போது நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள நியமனங்கள் : வெளியான அறிவித்தல்கள் | Recruitment To Teaching In Eastern Province

மேலும், நேர்முகப்பரீட்சைகள் 2025 ஜனவரி 16, 17மற்றும் 18 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது எனவும், நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பிரயோகப்பரீட்சையிலும் தோற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்குறிப்பிட்ட திகதிகளில், நேர்முகப்பரீட்சை சபை 1 தொடக்கம் 5 வரையுமான பரீட்சார்த்திகளுக்கு திருகோணமலை, கன்னியா வீதி, வரோதய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நேர்முகப்பரீட்சை சபை 6 தொடக்கம் 10 வரையுமான பரீட்சார்த்திகளுக்கு திருகோணமலை, கன்னியா வீதி, வரோதயநகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சிலும் நடைபெறவுள்ளது.

பேருந்து நடத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

பேருந்து நடத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

ஆசிரியர் நியமனம்

இந்த நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக்கடிதங்கள் ஏற்கனவே தபாலில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், கிழக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் அத்தியாயம் VIIம் 63ம் பந்திக்கு அமைவாக இந்த நியமனம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர், எழுத்துப்பரீட்சையின் பெறுபேறுகள் அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கிழக்கில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள நியமனங்கள் : வெளியான அறிவித்தல்கள் | Recruitment To Teaching In Eastern Province

ஆகவே, பரீட்சார்த்திகள் இந்த நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிப்பதனால் தங்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என கருதப்படலாகாது எனவும் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணை குழுவின் செயலாளரினால் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் எதிர்காலம் குறித்து ஜப்பான் தூதுவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி

இலங்கையின் எதிர்காலம் குறித்து ஜப்பான் தூதுவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி

நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW