தமிழ் பொது வேட்பாளர் விடயம் எனக்கு அறிவிக்கப்படவில்லை : இரா.சாணக்கியன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தெரிவு செய்யப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தனக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பா .அரிய நேந்திரன் பேரிடப்பட்டுள்ளார் என ஊடகவியலாளர் ஒருவர் சாணக்கினிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இன்றைய தினம்(08) அறிவித்துள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் வினவியை போது தனக்கு செய்திகள் மூலமே இவ்வாறு ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |