மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலையான ரஞ்சன் ராமநாயக்க

CID - Sri Lanka Police Ranjan Ramanayake Cardinal Malcolm Ranjith Crime
By Rukshy Jan 01, 2025 08:44 AM GMT
Rukshy

Rukshy

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்கவிடம் (Ranjan Ramanayake) கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த விசாரணையானது நேற்று (31) 2 மணிநேரம் நடைபெற்றுள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

நாமல் குமாரவிடம் வாக்குமூலம் 

சிவில் செயற்பாட்டாளரான நாமல் குமாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இதற்கு முன்னர் அவரிடம் வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.

மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலையான ரஞ்சன் ராமநாயக்க | Ranjan Ramanayake Appears The Cid Again

ரஞ்சன் ராமநாயக்க கர்தினாலை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலான ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருப்பதாகக் கூறும் நாமல் குமார, இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மற்றும் கர்தினால் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நாமல் குமாரவிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW