நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வில், அரசு பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு கடந்த ஒகஸ்ட் 22 முதல் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு
ஆனால் அவரது மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு, சிறைச்சாலை மருத்துவமனையின் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஒகஸ்ட் 26 அன்று திரும்பப் பெறப்பட்டபோது, அவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் ஸ்கைப் மூலம் வழக்கு நடவடிக்கைகளில் இணைந்ததோடு, அன்றைய தினம் அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று (29.10.2025) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |