நண்பன் நோன்பு துறப்பதற்காக சக கால்பந்தாட்ட வீரர் செய்த நெகிழ்ச்சியான செயல்

Ramadan Football
By Chandramathi Apr 03, 2023 08:30 PM GMT

மிலனில் உள்ள சான் சிரோவில் Serie A 2022-23 கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

இத்தாலியின் ஃபியோரெண்டினா (ACF Fiorentina) மற்றும் இண்டர் மிலன் (Inter Milan) இடையே நடைபெற்ற கால்பந்தாட்ட கிளப் போட்டியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நண்பன் நோன்பு துறப்பதற்காக சக கால்பந்தாட்ட வீரர் செய்த நெகிழ்ச்சியான செயல் | Ranieri Fakes Injury Football Ramadan Festival

இந்த ஆட்டத்தின்போது, ஃபியோரெண்டினா அணியைச் சேர்ந்த இத்தாலிய கால்பந்து வீரர் லூகா ராணியேரி (Luca Ranieri), ​​தனது அணி வீரரான மொராக்கோவைச் சேர்ந்த சோபியான் அம்ராபத்துக்கு (Sofyan Amrabat) நோன்பு துறக்க வாய்ப்பளிப்பதற்காக காயம் ஏற்பட்டதாக நடித்ததாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஆட்டத்தின்போது ராணியேரி கால்பந்து மைதானத்தில் தனது போலியான காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அம்ரபத் அவசரவசரமாக வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்து தனது விரதத்தை முடித்ததை அந்த வீடியோவில் காணகூடியதாகவுள்ளது.


இந்த ஆண்டு புனித ரமழான் மாதம் மார்ச் 23 அன்று தொடங்கியது மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் பகலில் நோன்பு நோற்கிறார்கள் மற்றும் சுஹூருக்குப் பிறகு மீண்டும் நோன்பைத் தொடங்குவதற்கு முன் இப்தாருடன் நோன்பை முடித்துக் கொள்கிறார்கள்.

இப்போட்டியில் இண்டர் மிலனுக்கு எதிராக ஃபியோரெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.