ரமழான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி!

Sri Lanka Festival
By Fathima Mar 23, 2023 10:59 PM GMT
Fathima

Fathima

இஸ்லாமியர்கள் ரமழான் பண்டிகைக்காக நோன்பிருக்கும் புனித மாதம் ஆகும். 

நோன்பு இருக்கும் சமயங்களில், உங்களது உடலின் ஆற்றல்களில் மாற்றங்கள் ஏற்படும். எனவே அதற்கு ஏற்றாற் போல் நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

அதிகமாக தண்ணீர் பருக வேண்டும்

ரமழான் நோன்பு இருக்கும் ஆரம்ப நாட்களில் சிலருக்கு தலைவலி ஏற்படலாம். அதற்கு முக்கிய காரணம் அவர்களது உடலில் போதிய நீர்சத்து இல்லாமை ஆகும். 

”நோன்பு அல்லாதா நாட்களில் நீங்கள் எவ்வளவு தண்ணீர் எடுத்து கொள்கிறீர்களோ, அதே அளவிலான தண்ணீரை நோன்பு நாட்களிலும் நீங்கள் எடுத்துகொள்ள வேண்டுமென்பதே முதல் குறிக்கோள். அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் நீர் உட்கொள்வதை நீங்கள் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

இதை கடைப்பிடிப்பதற்கு மிக சிறந்த வழிகளில் ஒன்று, காலையில் எழுந்தவுடன் ஒரு லிட்டர் அளவிலான தண்ணீரை எடுத்துக்கொள்வதுதான்.

சரியான முறையில் நாளை துவங்குவது

ஒரு நாளில் மூன்று வேளை உணவு எடுத்து கொள்வதை விடுத்து, நீங்கள் இரண்டு வேளை உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள போகிறீர்கள். ஒன்று விடியலுக்கு முன்பாக எடுத்துக்கொள்ளும் சுஹூர், மற்றொன்று மாலையில் எடுத்துகொள்ளும் இஃப்தார்.

எனவே அந்த இரண்டு வேளை உணவையும் நீங்கள் உங்களுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய வகையில், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரமழான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி! | Ramadan Festival

நோன்பு இருக்கும் நாட்களில், சோர்வாக உணரப்படுவோம் என்பதால் அன்றைய தினங்களில் தூங்குவதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அத்தகைய சமயங்களில்தான் நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்வது அவசியம் .

அதிகாலையில் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக புரத சத்தும், கார்போஹைட்ரேட்டும், சத்தான கொழுப்பு நிறைந்திருக்க கூடிய உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதோடு காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம். ”இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ் அதற்கு சரியான தேர்வாக அமையும்.

வயிற்றை நிரப்பும் அளவிற்கு அது பெரிய உணவாக இல்லாமால் இருந்தாலும், அதில் நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

அதனுடன் கிரீக் யோகர்ட், சியா விதைகள், பால் மற்றும் பழங்களை சேர்த்து கொள்ளலாம்.

அதிகாலையில் எழுந்து சாப்பிடுவது பலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் சில தினங்களில் நமது உடல் அதற்கு பழகிவிடும். அதிகாலையில் சாப்பிடுவதை முதல் இரண்டு நாட்கள் நீங்கள் கடினமாக உணர்ந்தாலும், நீங்கள் சிறிது சிறிதாக உணவுகளை எடுத்துக்கொள்ள துவங்கும்போது, ஐந்தாவது நாளில் உங்களது உடல் அதற்கு பழகிவிடும். 

மாலை நேரங்களில் அதிக உணவு வேண்டாம்

காலையிலிருந்து நோன்பு இருப்பதால், மாலையில் நோன்பு துறந்தவுடன் ஆர்வத்தில் அதிக உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது.

”நோன்பு துறப்பது உற்சாகமான பொழுதாக இருக்கிறது. உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து விரதத்தை விடுத்து, உணவை எடுத்துக்கொள்ள துவங்கும்போது சிலர் உற்சாகத்தில் அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால் இஃப்தாரின்போது நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது அதிக கலோரிகளை கொண்டது.

 ”நோன்பு திறக்கும்போது தண்ணீரை முதலில் எடுத்துக்கொள்ளவேண்டும். பின் சில பேரிச்சம்பழங்களையும், பழங்களையும் எடுத்துக்கொண்டு பிரார்த்தனைக்கு செல்ல வேண்டும்.

அதன் பின் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. உங்களது உணவுகளில் புரத சத்து,கார்போஹைட்ரேட் மற்றும் காய்கறிகள் இருப்பது அவசியம். சூப், சிக்கன், மட்டன், மீன் போன்றவைகளால் செய்யப்பட்ட கெபாப் போன்ற உணவுகளை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சரியான நேரங்களில் உடற்பயிற்சி எடுத்துக்கொள்வது பொதுவாக நோன்பு நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக உடற்பயிற்சிகள் செய்வதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். ஏனெனில் உடற்பயிற்சிகளை முடித்தவுடன் உணவு எடுத்துக்கொள்வதை அவர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.

”ஆனால் அவ்வாறு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது எல்லா நேரங்களிலும் சரியாக அமையாது. ஏனெனில் உங்களின் அன்றாட வேலைகள் அதற்கு சரியாக ஒத்துழைக்காது.

உங்களது வலிமையில் கவனம் செலுத்துங்கள்

நோன்பு காலங்களில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதற்காக கட்டாயம் சிறிது நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும்.

”நமது உடல் அசைவுகளை உறுதிசெய்யும் வகையில் உடற்பயிற்சிகள் அமைய வேண்டும். இடுப்பு பகுதி, எலும்பு மூட்டுகள், தோள்பட்டைகள் என உடலின் அனைத்து பாகங்களிலும் அசைவு ஏற்படக்கூடிய வகையில் நாம் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த 30 நாட்களில் நீங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும்போது, உங்களது ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்களை உங்களால் உணரமுடியும். உடற்பயிற்சிகளை துவங்குவதற்கான சிறந்த மாதமாகவும் நீங்கள் நோன்பு இருக்கும் காலங்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்.

ரமழான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி! | Ramadan Festival

உங்களது நோக்கம் என்ன?

ரமழான் நோன்பிருக்கும் காலங்களில் நீங்கள் ஆற்றல் குறைவாக இருப்பதாக உணர்ந்தால், எதற்காக நாம் நோன்பு இருக்கிறோம் என்பது குறித்து சிந்தியுங்கள்

. ”கடமைக்காக நாம் நோன்பிருக்க கூடாது. இது ஆன்மிகம் தொடர்பான விஷயம். இது மிகவும் முக்கியமான காலகட்டம். நமது பாரம்பரியத்துடன் நம்மை இணைப்பதற்கு இந்த காலம் உதவுகிறது. நோன்பு காலங்களில் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் அனைத்தும் நம்மை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது. அதையும் மீறி நீங்கள் கடினமாக உணர்ந்தால், இது இந்த 30 நாட்களுக்கு மட்டும்தான் என்பதை நினைவுக்கொள்ளுங்கள்.