ராஜபக்ச குடும்பத்தின் ஐந்து பேர் விரைவில் சிறையில்

Rajapaksa Family
By Kamal Sep 30, 2026 04:19 AM GMT

 மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் ஐந்து பேர் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என 'இடதுசாரி மையத்தின்' அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாத காலப்பகுதிக்குள் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் சிறைவாசம் அனுபவித்து, அங்கேயே தமது ஆயுட்காலத்தை முடித்துக்கொள்ள நேரிடும் எனுவும் அதனை தவிர்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தின் ஐந்து பேர் விரைவில் சிறையில் | Rajapakshe Families 5 Members Will Be In Jail Soon

தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் திருட்டிற்கும் அடாவடித்தனத்திற்கும் வழிநடத்தியமையின் தவிர்க்க முடியாத விளைவும் பலனுமே இதுவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் முழு நாட்டுக்கும் வலுவானதொரு செய்தி கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

'ராஜபக்ச மாஃபியா குடும்பமே' நாட்டின் அரசியல் கலாசாரத்தைச் சீரழித்தமையின் பிரதான குறியீடாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக வரலாற்றில் ஒரேயொரு குடும்பம் ஒரு நாட்டை முற்றாக வங்குரோத்து அடையச் செய்தது என்றால், அது ராஜபக்ச குடும்பம் மட்டுமே என்பது ஒட்டு மொத்த உலகமும் அறிந்த உண்மையாகும் என என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்திற்காக இந்தக் குடும்பத்தை அரசியலிலிருந்து முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார்.