கிளிநொச்சி சந்திரன் பூங்கா முன்பாக போராட்டம்
கிளிநொச்சியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சந்திரன் பூங்காவை விட்டு அவர்களை வெளியேறுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சந்திரன் பூங்காவுக்கு முன்னால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பாதுகாப்பு படையினரது கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சந்திரன் பூங்காவை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ள நிலையில், அவர்களை வெளியேற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் கனகரத்தினம்(sugash kanagaratnam) தலைமையிலான கட்சி ஆதரவாளர்கள் குறித்த பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு நடவடிக்கை
இதனையடுத்து அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் போராட்டகாரர்கள் இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதன்போது பொலிஸார் ஆர்பாட்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தபோதும் கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்காரர்கள் சுமார் 2 மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.