வடக்கு மாகாண இந்து ஆரம்ப பாடசாலை சமூகத்தால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Madheeha_Naz Apr 11, 2024 12:23 AM GMT

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து சட்டவிரோதமாக பாடசாலையால் நிதி சேகரிக்கப்படுவதாக கூறி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது, இன்றையதினம் (10.04.2024) காலை நடாத்தப்பட்டுள்ளது.

பாடசாலை வாயிலில் இருந்து ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகம் வரை சென்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் மனு கையளிக்கப்பட்டு போராட்டம் நிறைவடைந்துள்ளது.

வடக்கு மாகாண இந்து ஆரம்ப பாடசாலை சமூகத்தால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Protest By Northern Hindu School Society

உரிய நடவடிக்கைகள் 

குறித்த மனுவை பெற்றுக்கொண்ட வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் தான் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்த நிலையில், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.  