மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Electricity Prices
By Fathima May 08, 2024 02:00 PM GMT
Fathima

Fathima

இலங்கையில் மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான வரைபை சிறிலங்கா மின்சார சபை தற்போது தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

 இலங்கையில் மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான இந்த மாதம் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமென சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம்

எனினும், சிறிலங்கா மின்சார சபை அதற்கான கால அவகாசத்தை கோரியிருந்ததாகவும் இதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு அறிவிப்பு | Proposal To Reduce Electricity Tariffs Sri Lanka

இந்த முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் மின் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், மின் கட்டணங்களை குறைப்பது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ள முடியுமென சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.