சுவிட்சர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி!

Sri Lanka Politician Sri Lanka Government Harini Amarasuriya
By Fathima Jan 19, 2026 05:06 AM GMT
Fathima

Fathima

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் 56ஆவது உலக பொருளாதார மன்ற வருடாந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இன்று (19) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

2026 உலக பொருளாதார மன்ற வருடாந்த கூட்டம் இன்று (19) முதல் 23 வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெற உள்ளது.

கலந்துரையாடல்கள் 

"உரையாடலின் உணர்வு" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்தில், அரச தலைவர்கள், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

சுவிட்சர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி! | Prime Minister Harini Visits Switzerland

இந்த பயணத்தின் போது, ​​பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களுக்கும் இடையே உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.