யாழில் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

Jaffna Sri Lanka Economic Crisis Litro Gas Economy of Sri Lanka
By Fathima Apr 06, 2023 06:51 PM GMT
Fathima

Fathima

யாழ்ப்பாணத்தில் நாளை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

எனவே நாளை காலையில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிரடியாக விலை குறைப்பு

யாழில் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு | Price Of Bread Has Been Reduced By Rs 10 In Jaffna

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது என ஊடகங்களில் வெளியாக செய்திகளை அடுத்து, கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் அதிரடியாக பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் கோதுமை மா, நல்லெண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில் பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள நிலையில் கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.