இராஜாங்க அமைச்சர்கள் ரணிலுக்கு ஆதரவு
இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவினை வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஆளும் கட்சியின் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை களமிறக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர்களில் பெரும்பான்மையானவர்கள் கோரியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்களில் 35 பேரில் 30 பேர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
ஆளும் கட்சியில் பிளவு
இந்த தீர்மானத்தின் ஊடாக ஆளும் கட்சியில் பிளவுகள் ஏற்படாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
தற்பொழுது பதவி வகித்து வரும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை என்ற காரணத்தினால் அவர்கள் யாருக்கும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை பொது வேட்பாளராக நியமிக்க வேண்டுமென இளம் இராஜாங்க அமைச்சர்கள் கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |