நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணிலே: முசம்மில் தெரிவிப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கிய போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியமாக அந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என முசம்மில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இந்தநிலையில், தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினால் அது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கி ஆதரவு திரட்ட முயற்சிப்பதாக முசம்மில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |