ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளை ரணில் பெறுவார்: காதர் மஸ்தான்
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய ரீதியில் அதி கூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரணில் மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலை ஆதரித்து இன்றைய தினம் (13) மதியம் மன்னார் பஜார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணிலின் வெற்றி
அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என மக்களும், வர்த்தகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். மக்கள் உண்மையில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கின்றனர். மக்களின் அமோக வரவேற்பு எங்களுக்கு கிடைக்கிறது.
ஜனாதிபதி ரணில் வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார். அதே போன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்.
மக்கள் ஆதரவு
எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் வெற்றி அறிவிப்பின் போது அதிகூடிய வாக்குகளுடன் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அறிவிக்கப்படுவார் என்பது மக்கள் எமக்கு வழங்கும் ஆதரவு மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த நாடும் மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சின்னமான கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |