ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்: ஹரின் ஆரூடம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதியின் நடவடிக்கை
''ஒக்டோபர் 14ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும். அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு கண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து முழுமையாக மீண்டு வருவதற்கும் இலங்கை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் ரணிலின் மீள் நியமனம் அவசியமானது.
ஏனைய கட்சி உறுப்பினர்களும் முயற்சி செய்யலாம். ஆனால் நான் பார்க்கும் விதத்தில், நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால், தற்போதைய ஜனாதிபதிக்கு இன்னொரு வாய்ப்பு தேவை.
எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதுவரை, ஜனாதிபதியின் நடவடிக்கை எமது நாட்டை முன்னேற்றத்தை நோக்கி அழைத்து சென்றுள்ளது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |