ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பான தெளிவின்மை! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
Ranil Wickremesinghe
Sri Lanka Cabinet
President of Sri lanka
By Mayuri
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி யோசனை
இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆறு ஆண்டுகளுக்கு மேல்' என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்திருந்தார்.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |