எதிர்காலத்தில் இணையவழி மூலம் ஆசிரியர் இடமாற்றம் !

Ministry of Education Ranil Wickremesinghe Education Teachers
By Shalini Balachandran Jul 03, 2024 06:44 PM GMT

எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பதவி உயர்வு அல்லது ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் எவருக்கும் அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் வலியுருத்தியுள்ளார்.

சிறந்த எதிர்காலம்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆசிரியர் இடமாற்றல் முறையை கணினி மூலம் செய்யலாமா என்பது குறித்து அமைச்சரிடம் கலந்துரையாடினேன்.

எதிர்காலத்தில் இணையவழி மூலம் ஆசிரியர் இடமாற்றம் ! | President Information Teacher Transfer Promotion

பதவி உயர்வு அல்லது ஆசிரியர்கள் தொடர்பில் யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்க முடியாது அதேபோன்று இதற்குப் பின்னர் இவ்விடயம் தொடர்பில் கடுமையாக செயல்பட வேண்டியேற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலருக்கு என் மீது கோபம் ஏற்படலாம் ஆனால் அதுதான் யதார்த்தம் நாம் நமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW