20 வேட்பாளர்களினால் தேர்தல் செலவு விபரங்கள் சமர்ப்பிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 13, 2024 11:26 AM GMT
Mayuri

Mayuri

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 20 பேர் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி எஞ்சிய வேட்பாளர்கள் தங்களது செலவு அறிக்கையை இன்று வழங்குவார்கள் என ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வழங்கப்பட்ட கால அவகாசம்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதற்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன்படி குறித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. 

20 வேட்பாளர்களினால் தேர்தல் செலவு விபரங்கள் சமர்ப்பிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு | President Election Sri Lanka Candidates

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW