இந்தோனேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Indonesia Earthquake World
By K. S. Raj Mar 22, 2024 05:43 PM GMT

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Powerful Earthquake Recorded In Indonesia

பல்வேறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.