அரச உத்தியோகத்தர்களின் ஏப்ரல் மாத கடன் கழிப்பனவை தள்ளிப்போட கோரிக்கை

Trincomalee Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Government Employee Imran Maharoof
By Thahir Mar 31, 2023 10:22 PM GMT
Thahir

Thahir

அரச உத்தியோகத்தர்கள் பெற்ற கடனுக்கான ஏப்ரல் மாத கழிப்பனவை தள்ளிப்போட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், நிதி அமைச்சரான ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் சகல மக்களுக்குமான பண்டிகை மாதமாகும், இந்தப் பண்டிகைக் காலத்தில் அதிக செலவுகள் ஏற்படுவது இயல்பாகும்.

அரச உத்தியோகத்தர்களின் ஏப்ரல் மாத கடன் கழிப்பனவை தள்ளிப்போட கோரிக்கை | Postpone Loan Deduction Of Government Employees

பெரும்பாலான அரச ஊழியர்கள்

இந்நிலையில் கடன் பெற்ற அரச ஊழியர்களின் கடன் கழிப்பனவுகள் போக எஞ்சிய தொகை பண்டிகையை கொண்டாடப் போதுமானதாக இல்லை என பெரும்பாலான அரச தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்திற்கான கடன் கழிப்பனவை தள்ளிப்போட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்களின் ஏப்ரல் மாத கடன் கழிப்பனவை தள்ளிப்போட கோரிக்கை | Postpone Loan Deduction Of Government Employees