தமிழர் பகுதியில் புதிய கடற்றொழில் சட்டத்திற்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
Mannar
Sri Lanka
Sri Lanka Fisherman
By Raghav
அரசினால் உருவாக்கப்பட்ட புதிய கடற்றொழில் சட்ட வரைப்பிற் கெதிராக மன்னார் (Mannar) நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
குறித்த சுவரொட்டிகள் நேற்றைய தினம் (17) மன்னார் நகரில் பல இடங்களில் காணக்கூடியதாக இருந்துள்ளது.
தேசிய கடற்றொழில்
கடற்றொழில் அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சுவரொட்டியில் கடற்றொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய கடற்றொழில் சட்டத்தை தோற்கடிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |