வாகன இறக்குமதியின் போது ஜப்பான் தரப்பிலிருந்து தடை செய்யும் சாத்தியம்
வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும், தற்போதுள்ள கடன் கடிதங்களை இரத்து செய்வதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்கும் போது ஜப்பானிய தரப்பிலிருந்து தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது வாகனங்களை வாங்குவதற்கு முன்பணம் செலுத்துவதும் வீண் செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாகன இறக்குமதி
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு பல வருடங்களின் பின்னர் ஒரேயடியாக கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் 04 வகைகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கடந்த வருடம் மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த ஆண்டு பெப்ரவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |