திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பூஸா சிறைச்சாலை
காலி மாவட்டத்திலுள்ள பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனையின் போது இரண்டு கையடக்கத் தொலையபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினரால் சிறைச்சாலை அத்தியட்சகரின் கட்டளைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புப் பரிசோதனையின் போதே குறித்த கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும், இரண்டு பிரிவுகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப் பிரிவுகள்
ஏ மற்றும் பி எனப்படும் இரு பிரிவுகளிலும் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் இரண்டாம் தர குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இப்பிரிவிலிருந்து தான் குறித்த தொலைபேசிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இச்சிறைச்சாலையினுள் இருப்போர்கள் பாரிய குற்றவாளிகள் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |