நாட்டு மக்களுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

Sri Lanka Police WhatsApp Social Media
By Faarika Faizal Oct 08, 2025 10:03 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இணையம் ஊடாக நடக்கும் நிதி மோசடி தொடர்பாக பொலிஸார் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக இடம்பெறும் நிதி மோசடி காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இணைய வழி நிதி மோசடிகள் நடைபெறுவதாகவும் இது தொடர்பில் தினமும் முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் இதுவரை இலஞ்சம் தொடர்பில் 4500 முறைப்பாடுகள் பதிவு

இவ்வருடம் இதுவரை இலஞ்சம் தொடர்பில் 4500 முறைப்பாடுகள் பதிவு

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

நாட்டு மக்களுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை | Police Warns Warning Over Fake Social Media Post

எனவே சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பல்வேறு வருமான ஆதாரங்களை வழங்குவதாகக் கூறி அறிமுகமற்ற நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் செய்யும் மோசடி தூண்டுதல்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் வங்கி கணக்கு இலக்கங்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்டவற்றை வெளியாட்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறைக்குள் மோசடி : வெளிப்படுத்திய அஞ்சல் அதிபர்

அஞ்சல் துறைக்குள் மோசடி : வெளிப்படுத்திய அஞ்சல் அதிபர்

இஸ்ரேல் சிறையில் சித்திரவதை: ஸ்வீடன் ஆர்வலரின் அதிர்ச்சி அறிக்கை

இஸ்ரேல் சிறையில் சித்திரவதை: ஸ்வீடன் ஆர்வலரின் அதிர்ச்சி அறிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW