நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இணையத்தள வழியாக (online) வாடகை கார் தொடர்பான நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளனர்.
பொலிஸாரின் அறிவுறுத்தல்
அதன்படி இணையத்தள வழியாக (online) வாடகை கார் சேவைகளைப் பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
அத்துடன், பணம் செலுத்துவதற்கு முன்பு கார் வாடகை நிறுவனத்தின் விபரங்களைச் சரிபார்க்குமாறும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கிடைத்துள்ள முறைப்பாடுகள்
மோசடி செய்பவர்கள் பணம் பெறுவது, அவர்களின் தொலைபேசிகளைத் துண்டிப்பது மற்றும் சேவையை வழங்காதது போன்ற முறைப்பாடுகள், தங்களுக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.