பொலிஸாரால் தேடப்படும் பெண்: வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்

Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Sivaa Mayuri Sep 18, 2024 03:50 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

சுமார் 150 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, தேடப்பட்டு வரும் பெண்ணொருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

போலி ஆவணங்களை சமர்ப்பித்து, வேறொருவரின் காணியை கையகப்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே அவர் தேடப்பட்டு வருகிறார். 

தொடர்பு இலக்கம் 

இந்நிலையில், குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் 0112-2434504 இலக்கத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாட்டு அறையின் 0112-2422176 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். 

பொலிஸாரால் தேடப்படும் பெண்: வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் | Police Out Picture Of A Lady