மக்களுக்காக பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட தொலைபேசி இலக்கம்

Sri Lanka Police
By Dharu Sep 25, 2025 06:32 AM GMT
Dharu

Dharu

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக காவல்துறை பல புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஹெராயின், ஐஸ், கொகைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கிடைப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றையம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வழங்கப்பட்ட தகவல்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர்கள் தேவையான சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட மேலும் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்களின் பெயர்கள் மற்றும் தொலைப்பேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கு மாகாணம் - சஞ்சீவ தர்மரத்ன - 071-8591991

தென் மாகாணம் - கித்சிறி ஜெயலத் - 071-8591992

ஊவா மாகாணம் - மகேஷ் சேனநாயக்க - 071-8592642

சபரகமுவ மாகாணம் - மஹிந்த குணரத்ன - 071-8592618

வடமேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் - அஜித் ரோஹன - 071-8592600

மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் - லலித் பத்திநாயக்க - 071-8591985

வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் - புத்திக சிறிவர்தன - 071-8592645

வடக்கு மாகாண டி.ஐ.ஜி - டி.சி.ஏ. தனபால - 071-8592644

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் - வருண ஜயசுந்தர - ​​071-8592640