அரசாங்க வாகன ஏல விற்பனையில் பாரிய முறைகேடு!

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakshana MA Jul 23, 2025 10:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

அண்மையில் நடைபெற்ற பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனையில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பிரபல மருத்துவ நிபுணர் ஒருவர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரபல மருத்துவ நிபுணரான காமினி ரணசிங்க என்பவர் இது தொடர்பில் கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த மே மாதம் நடைபெற்ற வாகன ஏல விற்பனையின் போது 2014ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட போர்ட் எவரஸ்ட் கார் (CAB 3453) ஒன்றின் விலை 2.5 மில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

வாகன ஏல விற்பனை

அதே போன்று கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற ஏல விற்பனையின் போது அதே ரக வாகனம்(CAB 3441) ஒன்று 6.6 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு ஏல விற்பனை செய்யப்பட்டது.

அரசாங்க வாகன ஏல விற்பனையில் பாரிய முறைகேடு! | Pm Office Vehicle Tender Scam Srilanka

எனினும், அதே ரக வாகனம் (CAN 3452) ஒன்றை நான் 09 மில்லியன் ரூபாவுக்கு ஏல விற்பனையில் எடுக்க டெண்டர் சமர்ப்பித்த போது வாகனத்தின் பெறுமதி அதனை விட அதிகம் என்று எனது டெண்டர் நிராகரிக்கப்பட்டது.

சுமார் இரண்டு மாத காலத்தினுள் ஒரே ரக வாகனமொன்றின் விலை 6.5 மில்லியன்களினால் எவ்வாறு அதிகரித்தது என்பதை நான் அறியேன்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை.. 35 வருடங்கள் கடந்து விலகும் மர்மங்கள்

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை.. 35 வருடங்கள் கடந்து விலகும் மர்மங்கள்

பாரிய முறைகேடு

ஆனால், இதில் பாரிய முறைகேடு நடைபெற்றுள்ளதை மட்டும் தெளிவாக அறிவேன். ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் பொதுமக்கள் உங்களை ஆட்சிக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அரசாங்க வாகன ஏல விற்பனையில் பாரிய முறைகேடு! | Pm Office Vehicle Tender Scam Srilanka

அவ்வாறான நிலையில், இவ்வாறான மோசடிகள் நடைபெறுவதைக் குறித்து எனது பலத்த அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

அம்பாறையில் காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்...

அம்பாறையில் காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்...

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW