கிண்ணியாவில் கலாசார மண்டபம் அமைக்க முக்கிய கலந்துரையாடல்

Trincomalee Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Aug 09, 2025 04:19 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிண்ணியா நகரத்திற்கான கலாசார மண்டபம் மற்றும் சந்தை வளாகம் அமைப்பதற்கான சாத்தியம் குறித்து கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தியின் தலைமையில் நகர சபை மண்டபத்தில் நேற்று (08) நடைபெற்றுள்ளது.

அதற்கு சாத்தியப்பாடான பல காணிகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

க.பொ.த. உயர்தர பரீட்சை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

க.பொ.த. உயர்தர பரீட்சை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முக்கிய கலந்துரையாடல்

அக்காணிகளை ஞாயிறு மாலை 4:30 மணிக்கு கள விஜயம் செய்து பார்வையிட்டு சாத்தியப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டு அதற்காக 9 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் கலாசார மண்டபம் அமைக்க முக்கிய கலந்துரையாடல் | Plans For Cultural Hall In Kinniya

இவ்வறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் கட்டடத்தின் தோற்றம் அதற்கான கட்டமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு முன் கொண்டு செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, வலய கல்வி பணிப்பாளர் இஸட்.எம்.எம்.முனவ்வரா நளீம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.  

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

மத்திய அரசிலிருந்து மாகாண அரசுக்கு வரலாம் போகலாம்: திருமலை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மத்திய அரசிலிருந்து மாகாண அரசுக்கு வரலாம் போகலாம்: திருமலை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGallery