பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

Pakistan
By Fathima Apr 17, 2023 08:49 PM GMT

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.282-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு | Petrol Prices Rise Again In Pakistan

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்த நாட்டின் நிதி மந்திரி இஷாக் தாா், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.5.78 உயர்த்தப்பட்டு ரூ.186-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.