ஜனாதிபதி தேர்தலை தடுக்கக் கோரும் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

President of Sri lanka Election
By Mayuri Jul 08, 2024 09:11 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அத்துடன் நீதிமன்றக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபா செலுத்துமாறும் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கட்டணத்தை செலுத்துமாறு உத்தரவு

நீதிமன்ற கட்டணத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனாதிபதி தேர்தலை தடுக்கக் கோரும் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம் | Petition Filed Requesting To Postpone

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனவ சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW