ஜனாதிபதி தேர்தலை தடுக்கக்கோரி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Rukshy Jul 03, 2024 11:02 AM GMT
Rukshy

Rukshy

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி, வர்த்தகர் ஒருவர் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

குறித்த மனுவானது, தொழிலதிபர் சி.டி. லீனாவ என்பவராலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால உத்தரவு

இந்நிலையில், இது தொடர்பில் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில், தற்போது திட்டமிடப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு அவரது மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை தடுக்கக்கோரி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் | Petition Against Presidential Election 2024

இந்த மனு தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.