ஈரானில் தொடரும் மக்கள் போராட்டங்கள்! உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்தும் தகவல்
ஈரானில் கடந்த டிசம்பர் இறுதியில் கடும் விலையேற்றத்துக்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள், தற்போது நாட்டை 1979 புரட்சியிலிருந்து ஆட்சி செய்து வரும் மத ஆட்சியாளர்களுக்கு எதிரான பெரிய எதிர்ப்பாக மாறியுள்ளது.
அரசு ஊடகங்களின் தகவல்படி, இந்த போராட்டம் காரணமாக, சமீப நாட்களில் 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர், போராட்டக்காரர்கள் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை இதைவிட அதிகம் என தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை
ஈரானின் ஆட்சி அமைப்பு தற்போது பிளவுபட்ட எதிர்க்கட்சிகளின் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது.

இந்த எதிர்ப்பு இயக்கத்தில் ஈரானுக்குள் செயல்படுபவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் ஈரானிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த சமூகத்தினரும் பங்கேற்று வருகின்றனர்.
இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில், ஈரானிய போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மக்கள் தெருக்களில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.