பலத்த காற்று மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
வங்களா விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் இதன் காரணமாக மட்;டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் காரணமாக தாழ்நிலைப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடலை அண்மித்துள்ள பிரதேசங்களில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு
மேலும், கடல் கொந்தளிப்பு காரணமாக அவர்கள் தங்களது வாழ்வாதார பொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவதை காண முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடல் பலத்த இரைச்சலுடன் கொந்தளிப்புடன் காணப்படுகின்றமையால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


