தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொரளை மக்கள் வங்கியின் தற்போதைய வங்கிக் கணக்கு தொடர்பான பணம் வரவு வைக்கப்படும் எனவும் பின்னர் அந்தப் பணம் பொது சேவைக்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவை
அத்தோடு, நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வங்கியில் வைப்பிலிடப்படும் பணம் மூலம் அதிகளவான மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் என்றும் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |