பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்படி அறிக்கை இந்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவதானம் செலுத்தப்பட்ட விடயம்
அவர் மேலும் கூறுகையில், படலந்த முகாம் மாத்திரமல்ல, கடந்த காலங்களில் இன்னும் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் தற்போது பட்டலந்த முகாம் குறித்த விடயங்களே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய படலந்த முகாம் குறித்த ஆணைக்குழு அறிக்கையை இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.