கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்தை ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ((M.L.A.M. Hizbullah) கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கையை ஹிஸ்புல்லாஹ் நேற்றையதினம் (7) நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.
கொழும்பு மற்றும் வடக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதாகவும் ஆனால், கிழக்கு மாகாணத்தில் அந்த அலுவலகம் கிடையாது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நடவடிக்கை
கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்று இல்லாதமையினால், அங்குள்ள மக்கள் இரண்டு மூன்று தினங்கள் கொழும்புக்கு அலைய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அதிகளவு உல்லாசப்பிரயாணிகள் வருகை தரும் கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |