தொழுகையுடன் பொறுப்புகளை தொடங்கியுள்ள ஸ்கொட்லாந்து பிரதமர் (படங்கள்)
ஸ்காட்லாந்து புதிய பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தில் 2014 ஆம் ஆண்டிலிருந்து பிரதமராகவிருந்த நிக்கோலா ஸ்டர்ஜன் கடந்த மாதம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் கூட்டம் இடம்பெற்ற நிலையில் நிக்கோலா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 37 வயதான ஹம்சா யூசுப்பிற்கும், நிதியமைச்சராக இருக்கும் கேட் போர்ப்சுக்கும் இடையே போட்டி நடந்துள்ளது.
இதில் ஹம்சா யூசுப் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஸ்காட்லாந்து நேஷனல் பார்ட்டியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முதல் முஸ்லிம் பிரதமராக அக்கட்சியின் ஹம்ஸா ஹாரூன் யூசுஃப் (வயது 37) கடந்த 28.03.2023 அன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் ஸ்காட்லாந்து பிரதமருக்கான பிரத்யேக மாளிகையான ப்யூட் ஹவுஸில் அவர் குடியேறிய கையோடு தனது குடும்பத்தினருக்கு ரமலான் தராவீஹ் தொழுகை நடத்தி தனது பொறுப்புக்காலத்தை தொடங்கியுள்ளார்.




