பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி

Pakistan
By Fathima Apr 18, 2023 10:02 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். 

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த 20 லாரிகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி | Pakistan Massive Landslide 2 Kills

இந்த நிலச்சரிவில் சிக்கி ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதுடன் சில வாகனங்களில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.